தமிழகத்தில் இன்று காலை அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர்களாக இருந்த எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இல்லங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சி காலகட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு விதிமுறைகளை மீறி சான்றிதழ் வழங்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அந்த புகாரில் திரு ஐசரி கணேஷ் அவர்களின் பெயரும் அடிபட்ட நிலையில் தற்போது அவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகின்றது. வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு லஞ்சம் கொடுத்து ESSENTIALITY சான்றிதழ் வாங்கப்பட்டதாக இந்த புகாறில் எவ்வளவு பணம் ? எப்போது கைமாறியது ? என கண்டுபிடிக்க ஐசரி கணேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.