Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கழிவறை அருகில் கிடந்த சடலம்…. டிக்கெட் பரிசோதகர் புகார்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

ரயில் பெட்டியில் உள்ள கழிவறை அருகாமையில் பெண் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியிலிருந்து சென்னை செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் பெட்டியில் கழிவறை அருகாமையில் 35 வயதுடைய பெண் இறந்து சடலமாக கிடப்பதாக டிக்கெட் பரிசோதகர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் அந்தப் பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தனர்.

இதில் அவர் உயிரிழந்திருப்பது ரயில்வே காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு ரயில்வே காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் சுப்ரமணி அளித்த புகாரின் பேரில் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர்.

அந்த விசாரணையில் இறந்தவர் பீகார் மாநிலத்தில் இருக்கும் நாரியா மாவட்டத்தில் உள்ள குமா கிராமம் பகுதியில் வசிக்கும் ஜாஹிர் நடாப் என்பது ரயில்வே காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் உடல் நலம் சரி இல்லாமல் இருந்தது ரயில்வே காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |