எதிர்பாராத விதமாக ரயில் மோதிய விபத்தில் 12 – ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் ராஜகணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 – ஆம் வகுப்பு படித்த விவேக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ஊருக்கு அருகிலுள்ள ரயில்வே தண்டவாளத்தை விவேக் கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த தண்டவாளம் வழியாக வந்த ரயில் எதிர்பாராதவிதமாக விவேக்கின் மீது மோதியது.
இதனால் பலத்த காயமடைந்த விவேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விவேக்கின் சடலத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.