தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகாமையிலிருக்கும் புதுப்பேட்டையில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மங்கம்மாபேட்டை ரயில்வே கேட் அருகாமையில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த போது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் அவர் மீது மோதியுள்ளது.
இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த ரயில்வே காவல்துறையினர் வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.