Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பாதியில் நின்ற ரயில்…. போக்குவரத்து பாதிப்பு…. பொதுமக்கள் அவதி….!!

ரயில் இன்ஜின் கோளாறு ஏற்பட்ட காரணத்தினால் தண்டவாளத்தில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் இருந்து ஹைதராபாத் வரை செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கேத்தாண்டப்பட்டி-வாணியம்பாடிக்கு இடையே திடீரென இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு நின்றுள்ளது. இந்நிலையில் பின்னால் வந்து கொண்டிருந்த இரண்டு சரக்கு ரயில்களும் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதனை தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த 2 சரக்கு ரயில்களும் வாணியம்பாடியை கடந்து சென்று பின் கேட் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலறிந்து வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்துள்ளனர்.

Categories

Tech |