தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ரயில் விபத்து புலனாய்வு பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியா தலைநகரான லண்டனைச் சேர்ந்த 59 வயதான Jama Mohamed Warsame என்பவர் கடந்த ஆண்டு மே 26-ஆம் தேதி Lambethல் தங்கியுள்ளார். மேலும் அங்கிருந்து அவர் வீடு திரும்புவதற்காக புறப்பட்டுள்ளார். அப்பொழுது தான் லண்டனில் முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் சுங்க ரயிலில் பயணித்துள்ளார். இதனையடுத்து அவர் ரயிலை விட்டு இறங்குவதற்கு ஒரு நிமிடமாக போராடியுள்ளார். மேலும் பொது முடக்கம் என்பதால் ரயில்வே ஊழியர்களும் பொதுமக்களும் அதிகமாக இல்லை. இதற்கிடையில் அவர் கீழே இறங்குவதற்காக முன்பாக கையசைத்துள்ளார்.
ஆனால் ரயில் புறப்பட அவரோ இறங்க முற்பட எதிர்பாராத விதமாக ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்குமிடையில் தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து ரயில் விபத்து புலனாய்வு பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” Jama Mohamed Warsame என்பவர் தண்டவாளத்தில் விழுந்த ஒரு நிமிடத்திற்கு பிறகு தான் இந்த விபத்து நடந்துள்ளது. மேலும் அவர் ரயிலில் இருந்து இறங்கும் போது தடுமாறியுள்ளார். குறிப்பாக அவர் அன்று காலை 10.10 மணி அளவில் விழுந்ததாக கூறப்படுகிறது. அதிலும் அவருக்கு உதவி புரியவோ அல்லது அபாய ஒலி எழுப்பவோ அங்கு யாரும் இல்லை” தெரிவித்துள்ளனர்.