புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா ராணிப்பேட்டை அருகே நடந்துள்ளது.
ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள நாவல்பூர் செல்லும் வழியில் ஒரு ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் போக்குவரத்திற்கு இடையுறாக இருபதினால் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக ரூபாய் 34 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே நேற்று புதிய மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்துள்ளது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ கலந்து கொண்டு பூமி பூஜைக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகளும் ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.