Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இங்கேயே சுத்திக்கிட்டு இருந்தான்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் வலைவீச்சு….!!

ரயில்வே நிலையத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் திருட்டு சம்பவங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயில் நிலையத்தின் நடைமேடையில் நீண்ட நேரமாக சுற்றிக் கொண்டிருந்த வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாரப்பட்டி பகுதியில் வசிக்கும் சிவசங்கர் என்பதும், பின் சபிரா பீவி என்ற பெண்ணுடன் இணைந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரிடம் இருந்த விலை உயர்ந்த 3 செல்போன்கள், 40 கிராம் வெள்ளி மற்றும் 4 கிராம் தங்க மோதிரம், 6 கிராம் தங்க சங்கிலி ஆகியவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவசங்கரை கைது செய்துள்ளனர். இதில் தலைமறைவாக இருக்கும் சபிரா பீவியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |