நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் ரயில் சேவை ரத்தும் மே 3ம் தேதி வரை நீட்டிப்பு என்று ரயில்வே அறிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவின் கடைசி நாளான இன்று காலை 10 மணிக்கு கொரோனா தொடர்பாக 4வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே பேசினார். அதில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டார். இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் ரயில் சேவை ரத்தும் மே 3ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என ரயில்வே அறிவித்துள்ளது.