Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கூடுதல் நேரம் வேலை பார்ப்பதால் பாதிக்கப்படும் உடல்நலம்…. போராட்டத்தில் ஈடுபட்ட கேட்கீப்பர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

கூடுதல் மணி நேரம் வேலை செய்வதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாக கேட்கீப்பர்கள் ரெயில்வே மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் பணியாற்றும் ரயில்வே கேட் கீப்பர்கள் 25 பேர் திண்டுக்கல் ரயில்வே மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் கூடுதல் நேரம் வேலை வாங்குவதால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இதனால் மருத்துவ பரிசோதனை செய்யும்படி கூறியுள்ளனர். மேலும் மருத்துவ விடுப்பு அளிப்பதற்கு சான்று அளிக்கும் படியும் தெரிவித்துள்ளனர். ஆனால் ரயில்வே மருத்துவமனை மருத்துவர் பழனிக்கு சென்று விட்டதால் கேட்கீப்பர்களை மருத்துவ பரிசோதனைக்கு மதுரைக்கு செல்லும் படி அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் ஏமாற்றமடைந்த கேட் கீப்பர்கள் திடீரென ரயில்வே மருத்துவமனையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ரயில்வே கேட் கீப்பர்கள் கூறுவதாவது, எங்களுக்கு வாரத்துக்கு 60 மணி நேரம் மட்டுமே வேலை என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் 72 மணி நேரம் வேலை வாங்குகின்றனர். மேலும் அவர்கள் கூடுதல் வேலை நேரத்திற்கு அலவன்சு தொகை தருவதாக கூறியும் இதுவரை தரவில்லை. ஆனால் கூடுதல் நேரம் வேலை பார்ப்பதால் உடல்நிலை பாதிக்கப்படுகிறது என்றும், இதற்காக மருத்துவ விடுப்பு கேட்டாலும் தருவதில்லை. எனவே 60 மணி நேரம் வேலை எனும் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |