மத்திய ரெயில்வே மந்திரி, மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
ரயில்வே தேர்வு வாரியம் வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி போராட்டம் நடத்திய இளைஞர்கள், பீகார் மாநிலத்தில் உள்ள கயா பகுதியில் நின்ற ரயில் பெட்டிக்கு தீ வைத்தனர். மேலும் ஓடும் ரயிலில் கற்களைக் கொண்டு எறிந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப்பதாவது, மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
அவர்களின் குறைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றி கொடுக்கப்படும். ரயில்வே தலைவர்கள் அனைவரும் மாணவர்களது குறைகளை கேட்டு சரி செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.