Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரயில்வே பணிகளில் புறக்கணிக்கப்படும் தமிழர்கள்……பொன்மலையில் முற்றுகை போராட்டம் ….!!

ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதை கண்டித்து திருச்சியில் ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே துறையில் பல்வேறு பணியிடங்களுக்காக தேர்வு கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அப்ரண்டிஸ் பயிற்சி முடிக்கப்பட்டவர்கள் 500 நூற்றுக்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஆணை வழங்குவதற்காக பொன்மலை பணிமனைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடந்த 3 நாட்களாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பொன்மலை ரயில்வே பணிமனையில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்த நிலையிலும் அவர்கள் அனைவரும் புறக்கணிக்கபட்டிருப்பதாக புகார் தெரிவித்த பணிமனை அருகே போராட்டம் நடைபெற்றது.

Categories

Tech |