Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உருண்டு விழுந்த பாறைகள்…. சேதமான தண்டவாளம்…. ஊழியர்களின் தீவிர பணி…!!

சேதமடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அடிக்கடி மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில்விழுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்ததால் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ஹில்குரோவ் அருகில் பாறைகள் உருண்டு ரயில்வே தண்டவாளத்தில் விழுந்துள்ளது.

இதனால் தண்டவாளம் மிகவும் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |