எஸ்.ஆர்.எம்.யு மற்றும் டி.ஆர்.இ.யு தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தின் சார்பாக ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யு உறுப்பினர்கள் செந்தில்குமார், சின்னசாமி ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். மேலும் ரயில்வே ஊழியர்கள் விரைவு ரயில், சரக்கு ரயில்கள், ரயில்வே நிலையங்கள் ஆகியவற்றின் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பழனியிலும் டி.ஆர்.இ.யு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே ஊழியர்களுக்கு பஞ்சப்படி விரைந்து வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.