சேலம் மாவட்டத்தில் வானம் இருள்சூழ்ந்து இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் கோடைகாலம் என்பதால் கடும் வெயிலினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது மத்திய கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் திடீரென வானம் இருள்சூழ்ந்து இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் தெருக்களில் மழை நீருடன் சாக்கடை கால்வாய் கழிவு நீரும் கலந்து ஓடியதால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.