சேலம் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளதால் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள தேவூர், கொட்டாயூர், பெரமாச்சிபாளையம் மற்றும் சென்றாயனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் நெல், கரும்பு, பருத்தி, சோளம் மற்றும் எள் உள்ளிட்ட பயிர் வகைகளை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் விவசாயிகள் கூலித்தொழிலாளர்களை பயன்படுத்தி பருத்தி செடிகளுக்கு மண் அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் எள் சாகுபடி செய்த விவாசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளதால் கரும்பு, பருத்தி, எள், உள்ளிட்ட விவசாய பயிர்கள் சாய்ந்து விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர்.