Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கும் வெயில்… திடீரென பெய்த சாரல் மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் பகுதிகளில் நேற்று திடீரென சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கத்தரி வெயில் கடந்த மாதம் 4-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட வெயிலின் தாக்கம் இந்த வருடம் எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 29-ம் தேதி கத்திரி வெயில் நிறைவு பெற்றுள்ள நிலையிலும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.

இந்த சூழ்நிலையில் எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான செட்டிகுறிச்சி, பிரான்பட்டி, புழுதிபட்டி, குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் திடீரென சாரல் மழை பெய்துள்ளது. பொதுமக்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து இந்த சாரல் மழை சிறிது மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும் விவசாயிகளும் இந்த சாரல் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |