பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை கனமழை பெய்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் நேற்று மாலை பலத்த மழை செய்துள்ளது. இதனால் அனுக்கூர், பாலையூர், அரசலூர், அன்னமங்கலம் ஆகிய பகுதிகளில் வாழை மரங்கள் விவசாயிகள் பலருடைய தோட்டங்களில் சேதமடைந்துள்ளன.
மேலும் உளுந்து, எள் ஆகியவை சாலைகளில் உலர வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை அனைத்தும் மழையில் நனைந்துள்ளன. அதேபோல் வேப்பந்தட்டை பகுதியில் பலத்த சூறாவளி காற்றினால் மின்சாரம் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.