லண்டனில் வெறும் 90 நிமிடங்களில் சுமார் 75 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
லண்டன் மாநகரம் முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வானிலை ஆராய்ச்சி மையம், லண்டனில் இருக்கும் loddon என்னும் நதிக்கு அருகில் அமைந்திருக்கும் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதோடு மட்டுமின்றி தெற்கு இங்கிலாந்தில் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதற்கிடையே லண்டனில் வெறும் 90 நிமிடங்கள் சுமார் 75 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் ரயில் சேவையும், போக்குவரத்து சேவையும் ரத்து செய்யபட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்கு லண்டனிலும் பெய்துவரும் கனமழையால் கோடீஸ்வரர்களும் தங்களுடைய வீட்டை விட்டுவிட்டு முகாம்களில் தங்கியுள்ளார்கள்.