உலகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், மத்திய மேற்கு வங்க கடல், வடக்கு வங்க கடல் பகுதி கடலோர பகுதிகளில், பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளில் இருக்கக்கூடிய மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோரப் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால், கடலுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.