Categories
மாநில செய்திகள் வானிலை

மேலடுக்கு சுழற்சி….. 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,

சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |