Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாட்டி வதைக்கும் வெயில்…. அரை மணி நேரம் பெய்த மழை…. மகிழ்ச்சியில் மக்கள்….!!

சுமார் அரை மணி நேரம் பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் சில நாட்களாக வெளியில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இரவு நேரங்களிலும் வெயிலின் வெப்பத்தை உணர்வதாகவும் மக்கள் கவலையில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி பகுதியில் நேற்று காலை பரவலாக மழை பெய்துள்ளது.

இந்த மழை சுமார் அரை மணி நேரம் பெய்ததால் அப்பகுதியில் நிலவி வந்த வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேபோன்று செம்பனார்கோவில், பொறையாறு, காட்டுச்சேரி, களியப்பணல்லூர், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழைக்குப் பின்னர் குளிர்ந்த காற்று வீசியதால் இதமான சூழல் உருவாகிறது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |