Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடிச்ச வெயிலுக்கு… இப்பம் கொஞ்சம் பரவாயில்ல… ஆனா இங்க மட்டும் வெள்ளம் வந்துருச்சு… அவதியில் பொதுமக்கள்…!!

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் நீரால் சூழ்ந்துள்ளது.

வளிமண்டலத்தில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர் நிலவி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் திருவண்ணாமலை சன்னதி தெரு, பெரியார் சிலை சந்திப்பு அவலூர்பேட்டை சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இது குறித்து அறிந்ததும் வெள்ள நீர் புகுந்தது வீடுகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் குப்பன், கிராம நிர்வாக அலுவலர் முத்து, ஊராட்சி செயலாளர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் துணிகள் ஆகியவற்றை வழங்கி உதவி செய்துள்ளனர்.

அதேபோல் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் அனைத்தும் சேரும் சகதியுமாக மாறி காட்சியளித்தது. இந்த மழையால் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சாலைகளில் வாகனம் செல்ல முடியாமல் இருசக்கர வாகனங்களை அவர்களுக்கு பொதுமக்கள் உருட்டிக்கொண்டு சென்றுள்ளனர். மேலும் இந்த மழையால் தண்டராம்பட்டு அருகே உள்ள முருகேசன் என்பவரது குடிசை இடிந்து விழுந்துள்ளது. இவர் வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் வெயிலில் வாடிய பயிர்கள் அனைத்தும் பச்சை பசேலென காட்சி அளிக்கின்றது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |