Categories
மாநில செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டத்திற்கு மழை…. மணிக்கு 45km TO 55km காற்று வீசும்… மீனவர்களுக்கு எச்சரிக்கை …!!

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களான கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி போன்ற இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதியில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்த வானிலை ஆய்வு மையம் மணிக்கு45 முதல்  55 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசுவதற்கு வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் இரண்டு தினங்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |