Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாளுக்கு மழை நீடிக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு வெப்பச்சலனம் காரணமாக மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலைபொழுதுகளில் மிதமான மழை பொழியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related image

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி , நாகை திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் ஐந்து சென்டி மீட்டர் மழையும், கோவை கிருஷ்ணகிரி திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது திருவாரூர் மாவட்டம் குடவாசல் மன்னார்குடி சேலம் மாவட்டம் வாழப்பாடி திருவள்ளூர் மாவட்டம் தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு அரபி கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |