குஜராத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் முதலைகள் தெருவுக்குள் அடித்து வரபட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்குள்ள வதோதராவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து தாழ்வான பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பல்வேறு பகுதி வெள்ளநீரால் மிதக்கிறது. மழையால் ஏற்பட்டு முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை மழை குறைவால் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கின்ற சூழலில் அங்குள்ள மக்களுக்கு அடுத்த பிரச்சனை உருவாகிள்ளது.கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள விஷ்வாமித்திரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது.
இதனால் அந்த ஆற்றில் இருந்த முதலைகள் தண்ணீரில் அடித்து தெருவுக்குள் வந்துள்ளன. இந்த ஆற்றில் 500க்கும் அதிகமான முதலைகள் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது மழை வெள்ளத்தால் முதலைகள் தெருக்களுக்கு வெள்ளத்தால் அடித்து வரபட்டுள்ளது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதலைகள் தெருக்களில் உள்ள நீரில் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. இதனால் மழையால் பரிதவித்த மக்கள் முதலையால் பரிதவிக்கின்றனர்.