தமிழக அரசின் உடைய வருவாய் நிர்வாக ஆணையர் எஸ். கே பிரபாகரன் வெளியிட்டுள்ள அரசாணையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக இரண்டு வட்டங்களுக்கு சீர்காழியில் 99, 518 குடும்ப அட்டைதாரர்கள், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கு கிட்டத்தட்ட 1,60,000 ரேஷன் கார்டுதரர்களுக்கு நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது.
ரேசன் கடைகள் மூலமாக இந்த நிதி என்பது விநியோகம் செய்யப்படும். இதற்கான மொத்த தொகையாக 16 கோடி ரூபாயை தமிழக அரசு , கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு அனுப்பி இருக்கிறார்கள் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளில் பெயர் உள்ளவர்கள் யாரேனும் நேரில் சென்று அந்த பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என வருவாய் நிர்வாக ஆணையினுடைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.