நெல்லை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நெல்லை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 15 நாட்களாக வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நெல்லை தென்காசி போன்ற மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. சேரன்மகாதேவியில் திடீரென நேற்று காலை கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பெய்ததால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.
மேலும் வீரவநல்லூர், முக்கூடல், மேலச்செவல், பத்தமடை, சுத்தமல்லி, கொண்டாநகரம், களக்காடு ஆகிய பகுதிகளிலும் மழை பரவலாக பெய்துள்ளது. அதேபோல் நெல்லை டவுன் பகுதியிலும் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு 15 நிமிடம் மட்டுமே மழை பெய்துள்ளது. பின்னர் சாரல் போல் மழை தூரியதால் அந்தப் பகுதியில் குழுமை நிலவியுள்ளது.