ஆதார் இன் புதிய பிளாஸ்டிக் அட்டையை எவ்வாறு பெறலாம் என்பதை இதில் காண்போம்
வங்கிக் கணக்கில் மொபைல் எண், பான் கார்டு, தனிநபர் சார்ந்த கணக்குகளும் ஆவணங்களும் படிப்படியாக ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வரி ஏய்ப்பை தடுக்கவும், மோசடியை குறைக்கவும், பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் வந்துள்ள நிலையில் ஏடிஎம் கார்டு போன்று ஆதாரும் பாலிவினைல் குளோரைடு வழங்கப்பட்டு வருகிறது. இது முற்றிலும் புதிய தோற்றத்தை கொண்டிருக்கும். இந்த கார்டுகள் பயன்படுத்துவதற்கு மிக எளிதாக இருக்கும்.
புதிய அட்டை சமீபத்திய பாதுகாப்பு அம்சத்தை கொண்டதாகவும், நீண்ட நாள் உழைக்க கூடியதாகவும் உள்ளது. இந்த அட்டையை நீங்கள் சுலபமாக ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். குடும்பத்தில் ஒருவர் அனைவரின் அட்டையை மொபைல் எண் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என யுஐடிஏஐ அறிவித்துள்ளது. https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint இந்த இணையத்தில் உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை கொடுத்தால் மொபைல் எண் கேட்கும் இதில் எந்த மொபைல் எண் வேண்டுமென்றாலும் நீங்கள் கொடுக்கலாம்.
அதற்கு ஒரு ஒடிபி வரும் அவற்றை கொடுத்து உள்நுழைவது மூலம் உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஆதார் அட்டைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும். இதில் ஒவ்வொருவரின் அட்டைகள் கட்டணமாக ரூபாய் 50 செலுத்த வேண்டும். கட்டணங்களை செலுத்திய பின் அட்டை அச்சடிக்கப்பட்டு உங்கள் வீடு தேடி வரும்.