தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடி , மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் சென்னையில் மெரினா திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, பெருங்குடி, தரமணி, வேளச்சேரி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
Categories