தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்பு மேற்கு வங்கத்தை புரட்டிப்போட்ட அம்பன் புயலால் தமிழகம் உட்பட பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச் சலனத்தால் 19 மாவட்டங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், இன்று மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது என்றும், மதுரை, திருச்சி, கரூர், வேலூர், ராணிப்பேட்டை, ஈரோட்டில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.