Categories
மாநில செய்திகள்

கோவை, ஈரோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஸியஸ் ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

ஜூன் 17,18 தேதிகளில் வடக்கு கேரளா, கர்நாடகா மற்றும் கோவா, மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வரை வீசக்கூடும். ஜூன் 17ல் வடக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வரை வீசக்கூடும்.

ஜூன் 17 முதல் 21ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று 45 முதல் 55 கி.மீ வரை வீசக்கூடும். ஜூன் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை வீசக்கூடும். மேற்கண்ட பகுதிகளில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |