Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, வெப்பச் சலன மழை பெய்து வருகின்றது. நேற்று மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வெயில் கொளுத்தியெடுத்தது . இன்று, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், லேசானது முதல், மிதமானது வரையிலான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |