Categories
பல்சுவை மாநில செய்திகள்

”14 மாவட்டங்களின் கனமழை”…. வானிலை ஆய்வு மையம்…!!

14 மாவட்டங்களின் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.வேலூர் , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி,  தர்மபுரி , கடலூர் , விழுப்புரம் , புதுவை , நாகை , காரைக்கால் , அரியலூர் , பெரம்பலூர் , திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Image result for வானிலை ஆய்வு மையம் புவியரசன்

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவை பொறுத்தவரை வேலூர் மாவட்டம்  ஆலங்காயத்தில்  15 சென்டிமீட்டர் ,  திருப்பத்தூர் 10 சென்டிமீட்டர் , சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 9  சென்டிமீட்டர் , காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் மற்றும் புதுவையில் தலா 7  செண்டி மீட்டர் மழையும் , மீனம்பாக்கத்தில் 3 சென்டிமீட்டர் , நுங்கம்பாக்கத்தில் 2  சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை .சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார்.

Categories

Tech |