Categories
மாநில செய்திகள்

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிக வெப்பம் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், திருச்சி, கரூர், மதுரையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. இதை 9 மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியசையும் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்ஸியஸை ஒட்டியும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |