தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகின்ற போதிலும் அடிக்கடி பல மட்டங்களில் மழையும் பெய்து வருகின்றது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு கடலோர மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் அதிகபட்சமாக 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது