Categories
பல்சுவை வானிலை

“அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்யும்” வானிலை ஆய்வு மையம்..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்  

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கர்நாடக பகுதியில் வலுவான நிலையில் உள்ளது. நேற்றைய தினம் தமிழக பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து இன்றும் நிலவி வருவதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை பொறுத்தவரையில் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Image result for மழை

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு  அதிகபட்சமாக திரிபுவனத்தில் 09 சென்டிமீட்டர் மழையும்  ஆரணி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 8 சென்டி மீட்டர் மழையும் உத்திரமேரூரில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை ஒருமுறை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவமழை பொருத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஜூன் 1 முதல் இன்று வரையில் மழையளவு 89 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.  ஆனால் இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 117 மில்லிமீட்டர். வழக்கத்தை விட மழையின் அளவு 24 சதவீதம் குறைவாக உள்ளது என தெரிவித்தார்

Categories

Tech |