தமிழகத்தில் வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைகாலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்சமாக வெப்பநிலை 40, குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசாக உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை :
மத்திய கிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அங்கு ஜூன் 20 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, கோவா, மகாராஷ்டிரா கடல் பகுதிகளுக்கு இன்று, நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.