Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

மழைக்கால கூந்தல் பாரமரிப்பு….. 4 அத்தியவாசிய குறிப்புகள் …!!

மழைத் தண்ணீர் உங்கள் கூந்தலுக்கு சிறந்தது அல்ல, இது உங்கள் கூந்தல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

மழைக்காலம் வந்துவிட்டது, இக்காலம் மிகவும் அழகாகத் தெரிந்தாலும் ,நீங்கள் கவனமாக இல்லையென்றால் இது முடிக்கு தீங்கு விளைவிக்கும்.மழைக் காலங்களில் ஏற்படும் பொதுவானப் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல்.இது உங்கள் தலை சுத்தமாக மற்றும் உலர்ந்து இல்லையென்றாலோ மற்றும் அதிக படியான ஈரப்பதத்தை கொண்டிருப்பதாலும் நடக்கிறது. அது அனைத்து வகையானபிரிச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியவை எல்லாம் உங்கள் கூந்தலை சிறிய முயற்சி செய்து பார்த்துக் கொள்வது மற்றும் இந்த குறிப்புகளை பின்பற்றுவது. அன்டிபாக்டிரியல் ஷாம்பு பயன்படுத்துங்கள்

நீண்ட காலப் பருவமழையின் போது உங்கள் தலையில் அதிகமாக எண்ணெய் சுரக்கிறது. இதை எதிர்ப்பதற்கு, உங்கள் தலைமுடியை தொடர்ந்து கழுவ வேண்டும். பூஞ்சை மற்றும் பாக்டிரியா நோய்த்தாக்கங்களுக்கு எதிராக போராடுவதற்கு, அன்டிபாக்டிரியல் ஷாம்பூக்கள் மற்றும் க்லென்சர்  உச்சந்தலைக்கு அத்தியாவசியமானவை.

shampoo mistakes

கூந்தலுக்கு லிவ்-இன் கன்டிஸ்ரனர் அவசியம்;

மழைநீர் பொதுவாக அமிலம் மற்றும் அழுக்கை கொண்டதாக இருக்கும். நீங்கள் வெளியில் செல்கிறீர்கள் என்றால் உங்கள் முடிக்கு கன்டிஸ்னர் இடுவதோடு இயற்கையாக கூந்தலை உலர்த்துங்கள்.இது உங்களின் கூந்தலை மழையில் இருந்து பாதுகாக்க ஒரு பாதுகாப்பு லேயரை உருவாக்குகிறது. இதை தவிர உங்கள் முடிக்கு நல்ல நறுமணத்தையும் இது தருகிறது.

shampoo

கூந்தலை ஈரமாக வைத்துக் கொள்ளாதீர்கள்:

மழையில் நீங்கள் வெளியில் செல்ல வேண்டியதாக இருக்கலாம் அல்லது நீங்கள் மழையில் மாட்டிக் கொள்ளலாம், நீங்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் உங்கள் கூந்தலை கழுவி உலரச் செய்வது முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கூந்தலின் அதிகபடியான ஈரம் தோற்று நோயை வரவேற்கிறது.கூந்தல் ஈரமாக இருந்தால் முடியை கட்டாதீர்கள்.

சரியான சீப்பை பயன்படுத்துங்கள்:

எல்லா காலத்திலும் சரியான சீப்பை பயன்படுத்துவது முக்கியமானது. குறிப்பாக நீங்கள் ஈரமான முடியில் அகலமான பற்களை உடைய சீப்பை பயன்படுத்துங்கள், இது கூந்தல் உடைவதிலிருந்து பாதுகாக்கும்.

Categories

Tech |