மழைக் காலங்கள் என்றால் சளி, இருமல் உடன் தொண்டை வலியும் வந்து பலரைப் பாடாய் படுத்தும். இதனை எளிமையான முறையில் வீட்டிலேயே குணப்படுத்தலாம்.
குளிர் காலங்களில் ஏற்படும் தொண்டை வலியை சரிசெய்ய முசுமுசுக்கை இலையைப் பயன்படுத்தலாம். 10 முசுமுசுக்கை இலை, 2 ஆடா தோடை இலை ஆகியவற்றை எடுக்கவும். இதனுடன் 4 அரிசி திப்பிலியை பொடி செய்து போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
இதை வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடித்துவர தொண்டை கட்டு விலகிப்போகும். இதோடு நெஞ்சுச்சளி பிரச்னைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். இந்த இலைக் கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் இதன் பொடி கிடைக்கும் அதனையும் பயன்படுத்தலாம்.