கனரா வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் குறித்து இப்பொது பார்க்கலாம்.
ரிஸ்க் எடுத்து முதலீடு செய்பவர்களுக்கு ஈக்விட்டி, மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் என்று பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன. அதேபோல அதிக ரிஸ்க் எடுக்காத முதலீட்டாளர்களுக்கும் சில முதலீட்டு வழிகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது பிக்சட் டெபாசிட் திட்டம். ஆனால் சமீபகாலமாக பிக்சட் டெபாசிட் திட்டங்கள் அதிகம் யாரும் விரும்புவதில்லை.
ஏனெனில் இதற்கான வட்டி விகிதங்கள் குறைந்துவிட்டன. ஆனால் தற்போது கனரா வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டியை திருத்தி உள்ளது. இப்புதிய வட்டி வீதங்கள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கனரா வங்கி திருத்தப்பட்ட புதிய வட்டி வீதங்களை இப்போது பார்க்கலாம். இதில் சில திட்டங்களுக்கு உயர்த்தப்பட்ட வட்டியும், சில திட்டங்களுக்கும் குறைக்கப்பட்டுள்ளன.
7 – 45 நாட்கள் : 2.95%
46 – 90 நாட்கள் : 3.90%
91 – 179 நாட்கள் : 4%
180 நாட்கள் – 1 ஆண்டு : 4.45%
1 ஆண்டு : 5.20%
2 முதல் 3 ஆண்டுகள் : 5.40%
3 முதல் 5 ஆண்டுகள் : 5.50%
5 முதல் 10 ஆண்டுகள் : 5.50%
இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான திட்டத்துக்கு 6% வட்டி வழங்கப்படும்.