தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வளத்தூர் மோசன்பேட்டை 4-வது தெருவில் நாவஸ்கரீம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தன்சியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்சியா காலை கடன் கழிப்பதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிப்பட்டுள்ளார்.
பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தன்சியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.