Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சிக்கனங்குப்பம் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரளா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மோகன் கட்டிட வேலை செய்வதற்காக ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |