ரயிலில் புகையிலைப் பொருட்களை கடத்திய வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தில் வந்து நின்ற ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயில் பெட்டியில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்ததை பார்த்த ரயில்வே காவல்துறையினர் அதை எடுத்துப் பார்த்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து புகையிலைப் பொருட்களை கடத்தி வந்ததாக ஜம்ஷிடுஅலாம் என்ற வடமாநில வாலிபரை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த 12 கிலோ புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஜம்ஷிடுஅலாம் கொத்தனார் என்பதும், விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூருக்கு புகையிலைப் பொருட்களை கடத்தி சென்றதும் ரயில்வே காவல்துறையினர் தெரியவந்துள்ளது.