தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுப்பேட்டை அருகாமையில் இருக்கும் சித்திரைசாவடி பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் முன்பாக திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.