நடிகை ரைஸா வில்சன் தன்னுடன் நடித்த பெஸ்ட் கோ நடிகர் யார் என்பதை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைஸா வில்சன். பின்பு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த பியார் பிரேமா காதல் படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் இவர் நடிப்பில் எஃப் ஐ ஆர் திரைப்படம் வெளிவந்தது.
ரைஸா வில்சன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது “Ask Me Anything” என்று ரசிகர்களிடம் உரையாடி வருவார். இந்த நிலையில் ரைஸாவிடம் ரசிகர் ஒருவர் உங்களுடன் இணைந்து நடித்த ஹீரோக்களில் பெஸ்ட் ஸ்டார் யார் என கேள்வி எழுப்பினார். அதற்கு சற்றும் யோசிக்காத பதிலளித்த ரைஸா ” என்னுடன் காதலுக்கு யாருமில்லை படத்தில் நடித்த பிரகாஷ் தான் சிறந்த கோ நடிகர். அவர் சூப்பர் டூப்பர் ஃபன் மேன். மேலும் ஜிவி பிரகாஷ் படப்பிடிப்பு தளத்திலும் நகைச்சுவை செய்து அனைவரையும் மகிழ்ச்சியாகவும், பாசிட்டிவாகவும் வைத்திருப்பார்” என்று கூறியுள்ளார்.