Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ராஜ கணபதி கோவில்…. நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்…. பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

கோவிலில் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ராஜ கணபதி கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாட்கள் தொடர்ந்து விநாயகருக்கு அலங்கார பூஜைகள் நடப்பது வழக்கமாக இருக்கிறது. அதன்படி இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 9 நாட்களாக பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து விழாவின் இறுதியில் விநாயகருக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.

இதற்கு முன்பாக கோவிலில் சிறப்பு யாகங்கள் நடைபெற்று விநாயகருக்கு சந்தனம் உள்ளிட்ட பல திரவியங்களினால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து விநாயகர் மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் காட்சியளித்தார். அதன்பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வைத்திருந்தது.

Categories

Tech |