பிரபல தொலைகாட்சி நடிகை அய்லிங்-எல்லிஸ். இவர் காது கேளாதவர். தற்போது ஸ்ட்ரெக்ட்லி கம் டான்சிங் என்ற பிரபல நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிரித்தானிய இளவரசரும், வருங்கால மன்னருமான சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலாவும் தொலைக்காட்சி தொடர் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றார்கள். அப்போது கமீலாவிடம் அய்லிங்-எல்லிஸ் தான் பங்கேற்கும் நடன நிகழ்ச்சியை மகாராணி பார்ப்பார்களா என்று கேட்டார். இதற்கு பதிலளித்த கமீலா “ஆம், உங்கள் நடன நிகழ்ச்சி, குறிப்பாக அதில் உங்கள் நடத்தை பார்ப்பார் என்று நினைக்கிறேன்” என்று கூறினார். இதனை கேட்ட அய்லிங்-எல்லிஸ் மகிழ்ச்சியில் பூரித்து போனார்.
இதனைத் தொடர்ந்து கமீலாவுக்கு பூங்கொத்தை கொடுத்தார். பின்பு கமீலா “தானும் தன் பேர பிள்ளைகளும் அய்லிங்-எல்லிஸ் நிகழ்ச்சியை பார்ப்பதாகவும், தான் அவருக்கு வாக்களித்ததாகவும்” தெரிவித்துள்ளார். ராஜ குடும்பம் தனக்கு வாக்களித்ததை எண்ணி தான் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.