ஸ்ரேயா மற்றும் சித்து திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
”ராஜா ராணி 2” சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் கதாநாயகனாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து. இதற்கு முன்னர் இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற சீரியலில் நடித்த போது ஸ்ரேயாவுடன் காதல் மலர்ந்தது.
இந்நிலையில், விரைவில் இவர்களுக்கு திருமணம் என கூறப்பட்டு வந்த நிலையில், இவர்கள் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.