Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அறந்தாங்கி 7 வயது சிறுமி கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோட்டம்..!!

அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான ராஜா தப்பியோடியுள்ளான்.

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இருக்கும் ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து சமூக ஆர்வலர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இதில் பக்கத்து வீட்டில் பூக்கடைக்காரரான ராஜா (26) என்பவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து குளத்திலுள்ள புதரில் வீசியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பூக்கடைக்காரர் ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்தநிலையில், இன்று காலை குற்றவாளி ராஜாவை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு காவலர்கள் கோகுல், குமார் மற்றும் முருகையன் ஆகியோர் அழைத்துச் சென்றனர். அப்போது கையில் மாட்டியிருந்த விலங்கை திடீரென உருவிக்கொண்டு குற்றவாளி ராஜா தப்பியோடியுள்ளான். தப்பியோடிய ராஜாவை 6 பேர் கொண்ட தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |